கோவையில் 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கல்

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கீகார ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் நாமக்கல் உள்ளடக்கிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப்,மேயர் கல்பனா ஆனந்த் குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகளின் சங்க பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வென்டில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் நீலகிரி நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர் வழக்குகிறார்.

இந்த நிகழ்வில் மேடையில் அமைச்சர் பேசி வருகிறார்..

உங்கள் பள்ளியை நோக்கி வருகின்ற மாணவர்களை சிறந்த மாணவனாக மாற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தனியார் பள்ளிகளும் எங்கள் பள்ளி தான். அனைத்து மாணவர்களின் நலனை கருதி தான் உத்தரவுகள் வழங்கப்படுகிறது.

தனியார் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதில் வரவேற்புகளும் விமர்சனங்களும் உள்ளது.இவை எல்லாம் நாட்டின் வளர்ச்சி. அரசும் தனியாரும் இணைந்து செயல்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆசிரியர்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். எந்த பள்ளிக்குச் சென்றாலும் தமிழ் ஆசிரியர் யார் என்று கேட்பது வழக்கம். தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஆர் டி இ மூலம் தனியார் பள்ளிக்கு பாதிப்புகள் வரக்கூடாது என்பதில் உள்ளோம். பீஸ் ஸ்ரட்சரில் சில பள்ளிகள் தவறாக ஈடுபடுகின்றனர்.

கொரோனாவால் மக்கள் மட்டுமல்ல பள்ளி நடத்துபவர்களும் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு துணையாக நீங்கள் இருங்கள் உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்.