யார் இந்த ஆயுஷ் பதோனி..! தோனியை கலங்க வைத்த குட்டிபையன்!!

ஐபில் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மற்றும் லக்னோ இடையிலான போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங் தேர்வு செய்தது.

தொடக்கத்தில் இருந்தே லக்னோ டாப் ஆர்டர் விக்கெட்டுகளை சென்னை அணி சுழற் பந்து வீச்சாளர்கள் எடுத்தனர். கைல் மேயேர்ஸ், மனன் வோஹ்ரா, கேப்டன் குருனால் பாண்டிய, கரண் சர்மா, ஸ்டோனிஸ், பூரான் என லக்னோ அணியின் மொத்த டாப் ஆர்டரும் வீழ்ந்த நிலையில், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மேட்ச் திருப்புமுனையாகி சென்னை அணியின் வசம் வந்தது.

இப்படி ஒரு பக்கம் விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணியில் மறுபுறம் நிதானமாக விளையாடிய பதோனி லக்னோவை சரிவில் இருந்து மீட்டார். பத்திரன, தீக்சனா என்று வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் அடித்து துவைத்தார்.

23 வயதாகும் இவர் பௌலிங் ஆல்ரவுண்டர் என்றாலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இவர் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனிலேயே மிக சிறப்பாக பேட்டிங் செய்தார்.

இவரின் சொந்த ஊர் உத்தரகாண்ட் ஆகும். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். கெளதம் கம்பிர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இவர் டெல்லி உள்ளூர் அணியில் இருந்து அப்படியே லக்னோ அணிக்கு வந்தார்.

முன்னதாக இலங்கைக்கு சமீபத்தில் நடந்த U19 டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினர். இதில் முதல் இன்னிங்சில் 202 பந்தில் 185 ரன்கள் அடித்து, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து பதோனி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இவர் தற்போது T20 போட்டிகளிலும் கலக்கி வருகிறார். தோனி என்ற பெயர் வைத்தாலே இப்படித்தான் போல என்று பலரும் இவரை பாராட்ட தொடங்கி உள்ளனர்.