வேளாண் பல்கலையில் சம்பா கோதுமை வயலில் விவசாயிகளுக்கு பயிற்சி

அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில், கோதுமைவயல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 75 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள கிழக்குப் பண்ணையில் கோதுமைப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டிரிட்டிகம் டைக்கோகம் மற்றும் டிரிட்டிகம் ஈஸ்டிவம் போன்ற கோதுமை ரகங்கள் 4.00 ஏக்கர் நிலப்பரப்பில் நவம்பர் மாத கடைசி வாரத்தில் விதைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பதி, மற்றும் ஹரியானா குருகிராம் கோதுமை மேம்பாட்டு இயக்ககம் இணை இயக்குனர் விக்ராந்த் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் கோதுமையின் பங்கு, கோதுமை விதை உற்பத்தியை வலுப்படுத்துதல் மற்றும் அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் உடனான தொடர்பைப் பற்றி துணைவேந்தர் வலியுறுத்தினார், மேலும் கோதுமை சார்ந்த ஆராய்ச்சியை வலுப்படுத்த வலியுறுத்தினார்.

குறைந்த தண்ணீர் தேவை மற்றும் லாபம் தரும் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பதி வலியுறுத்தினார்.