இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் கலந்துரையாடல்

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் வோல்வோ எய்ச்சேர் குழுமத்தின் துணை தலைவர் வெர்மா, மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிக்கல் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினர்.

அவர் பேசுகையில்: இன்றைய கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப காற்று மாசுபடுதலை தவிர்க்கும் விதமாக வாகனங்களை வடிவமைத்து வருகிறோம்.

தற்போது சி.என்.ஜீ மற்றும் ஹைட்ரஜனை போன்ற பசுமை எரிபொருளில் இயங்கக்கூடிய என்ஜினினை உருவாக்க எண்ணற்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர் ஆகிய நீங்கள் உங்கள் புதிய சிந்தனை பயன்படுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும். அதற்கு உங்களுக்கு அனைத்து வித உதவிகளை வோல்வோ எய்ச்சேர் செய்ய தயாராக இருக்கிறது என்று மாணவர்களை உற்சாகம் ஊட்டும் வகையில் பேசினார்.

மேலும் எய்ச்சேர் திறன் மேம்போட்டு மையத்தின் தலைவர் கவ்சிக் தே, பேசுகையில்: இந்துஸ்தான் கல்லூரியில் உள்ள எய்ச்சேர் திறன் மேம்பாட்டு மையம் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மையம். இதன் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து எய்ச்சேர் சென்டர்களுக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், முதன்மை அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர்கள் ஜெயா, நடராஜன், கோகிலவாணி, டீன் மகுடீஷ்வரன் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்துகொண்டனர்.