பி.எஸ்.ஜி கல்லூரியில் அறிவுக் கூடல் நிகழ்ச்சி

கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி ஐ டெக் கல்லூரியில் அறிவுக் கூடல் என்ற தலைப்பில் ‘ஐ டெக் எக்ஸ்போ 2023’ நடைபெற்றது.

‘ஐ டெக் எக்ஸ்போ’ என்பது பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பொறியியலில் உள்ள அனைத்து துறைகளை பற்றி எடுத்துரைக்கும் ஓர் நிகழ்வாகும். இதில் பொறியியல் குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றது. மேலும், துறை சார்ந்த மாதிரிகள் மாணவர்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்துகொண்டு துவக்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.