வேளாண் பல்கலையில் மசாலா பொடிகள், ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி பிப்ரவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.