பிரம்மாண்டமாக உருவாகும் லம்போர்கினி தொழிற்சாலை

உலகத்தின் ஆடம்பர கார்களின் மிகச்சிறப்பான நிறுவனமாக லம்போர்கினி உள்ளது. மேலும் சூப்பர் கார் பிரியர்களின் கனவு காராக லம்போர்கினி இருக்கிறது.இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் கார்கள் மிக சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. எனவே இதன் பிரமாண்ட தொழிற்சாலை இந்தியாவில் உருவாக உள்ளது.

இந்தியாவில் லம்போர்கினி பிரியர்கள் மிக அதிகமாக இருப்பதால், இங்கே தயாரித்து அதன் ஏற்றுமதி வரியை குறைத்து இந்திய சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாக திட்டமிட்டுள்ளது. அதிலும் இந்தியாவில் வியாபாரமாக லம்போர்கினி கார்களில் ஐம்பது சதவீதம் தென்னிந்தியாவில் தான் நடக்கிறது.

எனவே கேரளா தொழில்துறை அமைச்சர் ராஜூவை லம்போர்கினியின் அதிகாரிங்கள் குழு சந்தித்து பேசுகையில் மேலும் அச்சந்துப்பு குறித்த வீடியோவை கேரளா அமைச்சர் வெளியிட்டார். அதில் முதலீடு செய்வதற்கான பணத்தொகை, தொழிற்சாலை தொண்டாகுவதற்கான சிறந்த இடம், அங்கு தங்குவதற்கு ஏற்ற நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய விஷயங்கள் பேசப்பட்டது.

இந்தியாவின் லம்போர்கினி தலைமை அதிகாரியான சரத் அகர்வால், தென்னிந்திய சந்தைகளில் லம்போர்கினி கார்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை போன்ற நகரங்களை விட பெங்களூர், ஹைட்ரபாத், சென்னை போன்ற நகரங்களில் விற்பனை அதிகமாக உள்ளது. இதனால் கேரளாவில் பிரமாண்ட தொழிற்சாலை அமைந்துள்ளது.