சிபாகா சார்பில் குடும்ப விழா

கோயமுத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) தனது துறை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் பல நலதிட்ட செயல்பாடுகளை செய்து வருகிறது.

சிபாகாவின் மாதாந்திர கூட்டம் மாதம்பட்டி பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் கார்டன் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும், ஆண்டுதோறும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளும் குடும்ப விழாவும் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிபாகாவின் தலைவர் சுவாமிநாதன், செயலாளர் ராமநாதன், பொருளாளர் செந்தில், தலைவர் தேர்வு சகாயராஜ், மெம்பர் சர்வீஸ் பேனல் தலைவர் அருளகிரி, இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்தோடு விழாவில் கலந்துகொண்டனர்.