கோவையில் நாளை மின்தடை

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை ஈச்சனாரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஈச்சனாரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருமலை நகரில் ஒரு பகுதி, தருண் ரெசிடென்சி, ஈச்சனாரி-செட்டிபாளையம் சாலை, மதுக்கரை சாலை, எம்.எப்.ஏ நகர், பியோன் காலனி, மெகாசிட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.