இது வாட்ஸ் அப்பின் புதிய ‘அப்டேட்’

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், அதன் சமூக ஊடக தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பின் புதுவித அம்சங்களைத் தடையின்றி வழங்க முனைப்புக் காட்டி வருகிறார். அந்த வகையில், வாட்ஸ் அப் தளத்தில் பயனாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தக் கூடுதல் அம்சங்கள் அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் பயனர்களை விரைவில் அவர்களின் ஸ்டேட்டஸ், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யும் வகையில் புதிய அப்டேட் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டுக்கான பீட்டா சோதனையில் உள்ளது. மேலும், வாட்ஸ் அப்பில் புதிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சாட் அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் ஏஐ சாட்போட் உடன் ஈடுபட உதவுகிறது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, மெட்டாவின் பல தளங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.