ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மெஸ்ஸி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புவதாக நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழும் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி.35 வயதான இவர் கத்தார் உலகக் கோப்பை தொடருடன் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில்  பேசிய அவர், ”எனது உலகக் கோப்பை பயணத்தை, இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்த தொடர் வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். இந்த தொடரோடு முடித்துக் கொள்வதே சிறந்தது” என்று தெரிவித்திருந்தார்.

இதன் இடையே கத்தார் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நிகழந்த இப்போட்டியிலன் , பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றிக்குப் பின் பேசிய மெஸ்ஸி, “நான் அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. தொடர்ந்து இந்த சாம்பியன் அணிக்காக விளையாட விரும்புகிறேன்.

உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றதைக் கொண்டாடி வரும் மெஸ்ஸியின் ரசிகர்கள், அவரது இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டுள்ளனர்.