
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான டிவிட்டர் நிறுவனத்தை தலைமை எலான் மஸ்க், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக ஊழியர்களை நீக்கியும் பலர் வேலையை விட்டு நீங்கியதும் பல்வேறு சர்ச்சைகள் டிவிட்டர் மற்றும் எலன் மாஸ்க் மீது விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தன. இதனால் நாளுக்கு நாள் டிவிட்டர் குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மலை டிவிட்டர் சிலருக்கு முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் குழப்பத்துக்கு உள்ளாகினர், மேலும் டிவிட்டர் இயங்காதது குறித்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரத்துக்கு பின் ட்விட்டர் வழக்கம்போல் செயல்பட்டது