எஸ்.என்.எம்.வி கல்லூரியில் பாரதி விழா

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (எஸ்.என்.எம்.வி) மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை அன்று பாரதி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்று, பாரதியின் 141 வது பிறந்த நாளன்று நல்லனவற்றை எண்ண வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு கொண்டு நம் தேசத்திற்காக செயலாற்ற வேண்டும் என தலைமையுரை வழங்கினார்.

இவ்விழாவில் மாணவர்களுக்கிடையே “சொல்வது தெளிந்து சொல்” என்னும் தலைப்பில் இணையவழியில் வாசிப்புத்திறன் போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் தனலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். மேலும் இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.