கே.பி.ஆர் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

கோவை அரசூர் பகுதியில் அமைந்துள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் சத்திய குமார் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். பின்னர், சிறப்பு விருந்தினருக்கு ‘சுவாமி விவேகானந்தர் இளம் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் கே.பி.ஆர் கலை கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி பாலுசாமி, கல்லூரி முதல்வர் கீதா, தமிழ்த்துறை தலைவர் முத்துகுமாரவடிவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.