பாரா த்ரோபால் ஃபெடரேஷனில் புதிய நிர்வாகிகள் தேர்வு

பாரா த்ரோபால் ஃபெடரேஷன் இந்தியா ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையி்ல் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் த்ரோபால் விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் சாதிக்கும் விதமாக பாரா த்ரோபால் ஃபெடரேஷன் ஆப் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. உத்ரகாண்ட், அரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடாகா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் இதில் சாதித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பாரா த்ரோபால் ஃபெடரேஷன் இந்தியாவின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் புதிய தேசிய தலைவராக கோவையை சேர்ந்த ஆல்பர்ட் பிரேம் குமார், தமிழ்நாடு தலைவராக சரண், கௌரவ தலைவராக அர்ஜூனா விருது பெற்ற மகாதேவ், பல்வேறு நிலை நிர்வாகிகளாக ராமச்சந்திரா, கணேஷ் ஆச்சார்யா, மஞ்சுநாத், கணேஷ் பட், சிங்கார பாபு, க்யான் சிங், கணேஷ் குமார், மோகன் குமார், அனில் சிங் ராணா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்: மாநில, தேசிய, சர்வதேச அளவில் த்ரோபால் விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் சாதிக்கும் விதமாக பல்வேறு பயிற்சிகள் வழங்க இருப்பதாகவும், தற்போது இந்த விளையாட்டில் மாற்றுத்திறனாளி வீரர்கள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.

பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.