ட்விட்டருக்கு போட்டியாக ஸ்கோர் செய்யும் ’கூ’ செயலி!

கூவில் இதுவரை லைக், கமெண்ட், ஷேர், போன்ற வசதிகள் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது ‘சேவ் கூ’ எனும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டரைப் போன்ற இந்திய செயலியான ’கூ இந்தியா’ கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது தொடங்கி தற்போது பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன. குறிப்பாக ப்ளூ டிக்குக்கு கட்டணம் வசூல் செய்வதாக அறிவித்தது, ட்விட்டர் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் அதிருப்தியில் இருந்த பல பயனர்கள் மாஸ்டடோன் உள்ளிட்ட பிற சமூக வலைதள செயலிகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் கூ செயலிக்கும் கணிசமான பயனர்கள் அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில், பயனர்களை மேலும் ஈர்க்கும் வகையிலும், அவர்களது அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் 10 ப்ரொஃபைல் ஃபோட்டோக்களை மாற்றியமைக்கும் வசதி, ட்ராஃப்ட் செய்யும் வசதி உள்ளிட்ட புதிய அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது.

புதிய அம்சங்கள்

பயனர்கள் இப்போது 10 ஃபோட்டோக்கள் வரை பதிவேற்றலாம்.

கூ பயனர்கள் தங்கள் பதிவுகளை ட்ராஃப்ட் செய்து கொள்ளலாம்.

தற்போது ‘சேவ் கூ’ எனும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சேமிக்கப்பட்ட கூவை பயனர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

ட்விட்டர்  போல இல்லாமல் இந்திய அரசின் புதிய ஐ.டி. விதிகளை ஏற்றுக்கொள்வதாக கூ குறிப்பிடத்தக்கது.

 

– பா.கோமதி தேவி