CSK-வை பின்தொடரும் சாபம்…! அடுத்த ஆண்டு சென்னையில் ஆடுவது சந்தேகம்…?

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது கிளைமாக்ஸை நெருங்கி கொண்டிருக்கிறது. சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இதில் சென்னை அணி தங்களது சொந்த மண்ணில் 7 லீக் ஆட்டங்களிலும் விளையாடி முடித்துவிட்டது.

இந்நிலையில் சென்னை அணிக்கு ஒரு சாபம் இருப்பதாகவும், அதை தெரியாமல் அந்த தவறை சென்னை அணி செய்து விட்டதாகவும் ரசிகர்கள் சிலர் பீதியை கிளப்பி இருக்கிறார்கள்.

சென்னை அணி தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் விளையாடி முடித்துவிட்டது. எனினும் playoff வாய்ப்பு உறுதி ஆகாததால், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை அணி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து தொப்பிகளையும் பந்துகளையும் நினைவு பரிசாக அளித்தார்கள்.

இதில் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதற்கான பிரியாவிடை நிகழிச்சியாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர். அனால் சென்னை அணி இதுபோன்று பலமுறை லீக் ஆட்டங்கள் முடிந்த பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்.

சரி, இதில் என்ன தவறு இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா, இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் CSK அணிக்கு தெரியாமலே ஒரு சாபம் பின்தொடர்ந்து இருக்கிறது. காரணம் 2008ஆம் ஆண்டு லீக் ஆட்டம் முடிவில் சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சுற்றி வந்து நன்றி தெரிவித்து கொண்டார்கள்.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காரணமாக போட்டிகள் அனைத்தும் தென்னாப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதே போன்று 2019 ஆம் ஆண்டும் CSK வீரர்கள் ரசிகர்களுக்கு தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் பிரியாவிடை அளித்தார்கள். இதன் பிறகு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டு 3 ஆண்டுகள் சென்னையில் போட்டி நடைபெறாத நிலை ஏற்பட்டது.

தற்போது மீண்டும் அதே தவறை CSK செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதால் , சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.