தேசிய அஞ்சல் வாரம்; நம்பிக்கைகாக ஒன்றுபடுவோம்!

இந்த ஆண்டு “நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்திய அஞ்சல் துறையினரின் பங்கு” என்பதனை குறிக்கும் வகையில் நம்பிக்கைகாக ஒன்றுபடுவோம்” (Together for Trust) என்பதனை தலைப்பாக கொண்டு தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

தேசிய அஞ்சல் வாரம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு அஞ்சல் துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (உலகளாவிய தபால் ஒன்றியம்) 1874 ம் ஆண்டு தொடங்கப்பட்டதன் நினைவாக இந்த அஞ்சல் வார கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.

மக்களிடையே அஞ்சல் துறை பற்றியும் அதனுடைய திட்டங்களை பற்றியும் பொதுமக்களுக்கு அஞ்சல் துறையினர் செய்து வரும் சேவைகள் பற்றியும், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த ஒரு வாரத்தில் நடத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

இதன் தொடக்கமாக திங்கட்கிழமை அக்டோபர் 9ம் தேதி கோவை தலைமை அஞ்சலகத்தில்
அஞ்சல் வார கொண்டாட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. 10ம் தேதி நிதி வலுவூட்டல் தினமாகவும் 11ம் தேதி தபால் தலை சேகரிப்பு திளமாகவும், 12-ஆம் தேதி நபால்கள் மற்றும் பார்சல் திளமாகவும் கடைசி நாளாகிய 13ம் தேதி சாமானியர் நல்வாழ்வு தினமாகவும் அனுசரிப்பது என அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

முக்கிய நிகழ்வாக, பள்ளி குழந்தைகள் தங்களது 5ம் வயதிலும் 15ம் வயதிலும் ஆதார் அட்டையில் உள்ள கைரேகை புகைப்படம் மற்றும் கண் கருவிழி ஆகியவற்றை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதற்கு உதவியாக 13ஆம் தேதி அன்று சிறப்பு ஆதார் கவுண்டர் பள்ளி குழந்தைகளுக்காக கோவை தலைமை அஞ்சலகத்தில் திறக்கப்பட உள்ளது.

இந்த ஆதார் கவுண்டர் பள்ளிக்கு சென்றுவிட்டு வரும் குழந்தைகள் தங்களது ஆதார் சேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் எனவும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.