மன அழுத்தத்தை குறைக்கும் வில்வ மரத்தின் மகிமை

பிள்ளையாருக்கு எப்படி அருகம்புல்லோ, அதுபோல சிவபெருமானுக்கு உரியது வில்வ இலை. வில்வ மரத்தை வழிபடுவதால் சிவபெருமானின் அருள் மட்டும் அல்ல அந்த மரத்தின் உள்ள அனைத்தும் (மரத்தின் இலை, பட்டை, பூ, பழம், வேர்,காய்) மக்களுக்கு அருள் தரும் மருத்துவ குணமாகுவதற்கு பயன்படுகிறது.

வில்வ மரத்தின் வேர் – வில்வ வேரை மருத்துவ முறைப்படி எடுத்துக்கொண்டால், பசியின்மை, சுவையின்மை, விக்கல், பித்தசுரம் இடைவிடாத வாந்தி, உடல் இளைத்தல் போன்றவற்றை நீங்கும்.

வில்வ இலை – தினமும் வில்வ இலைத்தூளுடன் மிளகு சேர்த்து,பொடி செய்து  இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன்  உடன் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  நீரோற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு  பயனளிக்கும்.

வில்வப் பட்டை -வில்வப் பட்டையுடன், விளாப் பட்டை, நன்னாரி மற்றும் சிறுபயறு, சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல்நீங்கும்.

வில்வ பூக்கள் – வாய்துர்நாற்றத்தைப் போக்கி, விஷத்தையும் முறிக்கும் குணம் கொண்டது.

வில்வ காய் – இந்த காயை பசும்பால் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளித்தால் மண்டைச்சூடு, கண்ணெரிச்சல் நீங்கும்.  வில்வக்காயுடன் இஞ்சி, சோம்பு நீர் சேர்த்து காய்ச்சி குடித்தால் மூல நோய் நீங்கும்.

வில்வம் பழம் – வில்வ பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் மர ஆப்பிள் (Wood Apple), பேல் பழம் (Bael Fruit) என்றழைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் பழங்களின் “அரசி” என்று அழைப்பார்.

வில்வ பழ ஜூஸில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மற்றும் வயிற்றுப் புண்களுக்கு சிறந்த மருந்து. வில்வ பழச் சதையை அரைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்கு மருந்தாகும்.

 

– கோமதிதேவி. பா