கே.பி.ஆர் மாணவர்களால் பேட்டரி சார்ஜர், தானியங்கி மின்சார விளக்கு கண்டுபிடிப்பு

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையும், ஆர்.எஸ்.பவர் சிஸ்டம் கம்பெனியும் இணைந்து குறைந்த விலையில் பேட்டரி சார்ஜர் மற்றும் சூரிய ஒளியில் இயங்கும், தானியங்கி மின்சார விளக்குகளை தயாரித்து உள்ளனர்.

இந்த தயாரிப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற ‘எலக்ட்ரோடெக் 2022’ கண்காட்சியில் நடைபெற்றது. இந்த நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் படைப்புகளை கொடிசியாவின் தலைவர் திருஞானம் அறிமுகப்படுத்த, ஓரிமார்ட் நிறுவனத்தின் நிறுவனர் சபிர் இமானி மற்றும் பெண்டா கம்பெனியின் நிறுவனர் குமார் வெங்கடேசலம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி மற்றும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா வழிகாட்டுதலில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி குறிப்பிடும் போது இந்த படைப்பானது எஸ்.எம்.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே சந்தையில் உள்ள பேட்டரி சார்ஜர்களை ஒப்பிடும்போது தங்களது படைப்புகள் அதிவேகமாக பேட்டரியை சார்ஜ் செய்யக்கூடியது என்றும், சந்தை விலையை விட குறைவான விலையில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

இந்த விழாவில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி நடராஜன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறை தலைவர் கதிர்வேலு, கல்லூரியின் ஐ.ஐ.பி.சி.தலைவர் கிருபா சங்கர், பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த படைப்புகளை உருவாக்கிய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்லூரியின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் ஆண்டுகளில் இதுபோன்ற பல படைப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.