உலகின் 5வது பொருளாதார நாடாக உயர்ந்த இந்தியா

சர்வதேச பொருளாதாரத்தில் 2008 நிதி நெருக்கடிக்குப் பின்பு கொரோனா தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வாயிலாகச் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகள் எனக் கருதப்படும் டாப் 10 நாடுகள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றங்களும் சரிவுகளும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் இந்தியா உட்படப் பல நாடுகள் வளர்ச்சிப் பாதையில் உள்ளது.

பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி தாறுமாறாக உயர்ந்து அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதால் 5வது இடத்தில் இருந்த பிரிட்டன் தற்போது 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

இதனால் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த பிரிட்டன் தற்போது 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, அந்த இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தற்போது ஐஎம்எப் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் இந்தியா முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ரஷ்யாவின் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் மூலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியா 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

 

 

– பா.கோமதி தேவி