ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் புதுமை, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்கம் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாமின் துவக்க  விழா நடைபெற்றது.

விழாவிற்குக் கல்லூரியின் துணை முதல்வர் கருப்புசாமி வரவேற்றார். முதல்வர் அலமேலு தலைமை தாங்கினார்.

முகாமினை புது தில்லி ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவர் சீத்தாராமனால், துவக்கி வைக்கப்பட்டு  நிகழ்வுகள் அனைத்தும் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

கல்வி அமைச்சகம், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு (எம்ஐசி) ஆகியவை மிகவும் எதிர்பார்க்கப்படும் “புதுமை கண்டுபிடிப்பு , வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் (ஐடிஇ) பூட்கேம்ப்களை (முகாம் –  இரண்டாவது கட்டம்)  இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் பத்து மையங்களில் தொடங்குகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி,  இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம்  ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கி , பிப்ரவரி 2 ஆம்தேதி வரை நடக்கிறது . ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பகுதிகளிலிருந்து 300 மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு விருந்தினராக வோல்வோ குழுமத்தின் புதுமை கண்டுபிடிப்புகளின் ஆலோசகர் அர்ஜுன் மற்றும் கௌரவ விருந்தினராக இந்திய அரசின்  கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்பு துறை நிர்வாக ஆசிரியர், விகாஸ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர் பேசுகையில், இந்த தனித்துவமான முயற்சி, மாணவர் கண்டுபிடிப்பாளர்களின் புத்தாக்கம், வடிவமைப்பு மற்றும் தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள் பல்வேறு தயாரிப்பு வடிவமைப்பு முறைகளை ஆராய்வதற்கும், வடிவமைப்பு சிந்தனைக் கருத்துகளை வளர்ப்பதற்கும் மற்றும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தொழில்முனைவோர் கல்விக்கான ஆதரவிற்காகப் புகழ்பெற்ற வாத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற சில பேச்சாளர்கள் மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள் பயிற்சி அமர்வுகளை வழங்க உள்ளனர்.