மேக்ஸ் லைஃப்பின் புதிய காப்பீடு திட்டம் அறிமுகம் 

மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ‘ஸ்மார்ட் வெல்த் வருடாந்திர உத்தரவாத ஓய்வூதியத் திட்டம்’ என்னும் புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கான தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு அவர்களின் வருமானத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  ஓய்வூதியதாரர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம், இந்த  ‘ஸ்மார்ட் வெல்த் வருடாந்திர உத்தரவாத ஓய்வூதியத் திட்டம்’ தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கான நெகிழ்வுத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றை இணைத்து, ஓய்வூதிய திட்டமிடலில் மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்.

இந்திய ஓய்வூதிய குறியீட்டு ஆய்வு 3.0 என்னும் ஆய்வை மேக்ஸ் லைப் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்டது. இதில் நகர்ப்புற இந்தியர்களிடையே ஒரு

குறிப்பிடத்தக்கக் கவலை இருப்பதைக் கண்டறிந்தது. இதில் சுமார் ஐந்தில் மூன்று பேர் ஓய்வு பெற்ற பத்து வருடங்களில் தங்கள் சேமிப்பு குறைந்துவிடும் என்ற அச்சத்தைத் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர்களின் கவலையைப் போக்கும் வகையில் வாழ்நாள் முழுவதுமான வருமானத்தை வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைகளுடன் இணைத்து, அவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அவர்களின் அன்புக்குரியவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையில் புதிய காப்பீடு திட்டத்தை வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த புதிய ‘ஸ்மார்ட் வெல்த் வருடாந்திர உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை’ மேக்ஸ் லைப் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பிரீமியம் தொகையைத் திரும்பப் பெறுவதற்கும், அவர்களுக்குத் தேவையான காலத்தில் பணத்தை எடுத்துப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மேக்ஸ் லைப் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பிரசாந்த் திரிபாதி கூறுகையில், இந்தியாவைப் பொறுத்தவரைப் பணி ஓய்வுக்குப் பின் தங்களது சேமிப்பு குறையாமல் கணிசமாக இருக்க வேண்டும் என்று பெரும்பான்மையான ஊழியர்கள் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.  ஸ்மார்ட் வெல்த் வருடாந்திர உத்தரவாத ஓய்வூதியத் திட்டம், எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்றவாறு புதுமையான தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் சான்றாக உள்ளது. அதன் தனிப்பயனாக்கக்கூடிய அம்சங்கள் மற்றும் தனித்துவமான மாறுபாடுகள் மூலம், இந்தத் திட்டம் தனிநபர்களுக்கு அவர்களின் ஓய்வூதியப் பயணத்தை முன்கூட்டியே வடிவமைக்க உதவுகிறது மற்றும் வலுவான பொருளாதார உணர்வுடன் அவர்களின் விருப்பங்களைத் தொடர உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.