பாரதியார் பல்கலைக்கழக அளவிலான உடல் கட்டமைப்புப் போட்டி 

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான சிறந்த உடல் கட்டமைப்புப் போட்டி இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதன் வகையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 90 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த  சாம்பியன்ஷிப்பை வென்றது. அதைத் தொடர்ந்து பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிகளும் சிறப்பான புள்ளிகளைப் பெற்று வென்றனர்.

அதேபோல், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பிரவின் ராஜ் பாரதியார் பல்கலைக்கழக அளவிலான பட்டத்தையும், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கார்த்திகேயன்  இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட அமேச்சூர் பாடி பில்டர் அமைப்பின் இயக்குநர் வினோத் கலந்து கொண்டார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறையின் பொறுப்பு இயக்குநர் ராஜேஸ்வரன், இந்துஸ்தான் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, உடற்கல்வி உதவி இயக்குநர் ஜீவா, உடற்கல்வி இயக்குநர் கருணாநிதி மற்றும் பல்வேறு கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களைப் பாராட்டினர்.