ரூ. 68.25 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, ரூ. 68.25 கோடி மதிப்பில் சுமார் 3569 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளில் பயன்பெறும் வகையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாநில தூய்மை பணியாளர் நல வாரிய துணைத் தலைவர் கனிமொழி, பொள்ளாச்சி நகராட்சி தலைவர்
சியாமளா நவநீதகிருஷ்ணன், கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.