கே.ஐ.டி. கல்லூரியின் 11- வது பட்டமளிப்பு விழா

கே.ஐ.டி. கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் 11- வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் கோட்ரேஷ் (Director and Chief Executive SBMT DRDO, Bengaluru) கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன் வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் கோட்ரேஷ் கூறுகையில், நீங்கள் கடந்து வந்த பல சவால்களை நீங்கள் திரும்பிப் பார்க்கும் ஒரு நாள் என்றும், அவற்றைச் சந்திக்கத் தேவையான திறன்களும் அறிவும் உங்களிடம் உள்ளது என்பதை அறிந்து. வரவிருக்கும் சவால்களை எதிர்நோக்கும் நாள் என்று கூறி மாணவர்களுக்கு இவ்விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிக்கான முன்னேற்றம் மற்றும் பங்களிப்பு குறித்து அவர் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கும் கல்லூரி நிறுவனத்தலைவருக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறி தன் உரையை முடித்தார். இவ்விழாவில் எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.இ., மற்றும் பி.டெக் படிப்புகளின் மாணவர்களுக்கு மொத்தம் 562 பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி,கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லூரி முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.