சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூ.25.50 காசுகள் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் குறித்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று முதல், ரூ.2, 045-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டு, ரூ. 2,009.50 என்று நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று முதல், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் ரூ.1, 885க்கு பதிலாக ரூ.25.50 குறைத்து ரூ.1, 859க்கு விற்பனை செய்யப்படும்.

வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.