எல்சி மருத்துவமனை தலைவர் ராஜனுக்கு தொழில்சார் சிறப்பு விருது

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மில்லினம் சார்பில் ‘தொழில்சார் சிறப்பு விருது’ (Vocational Excellence Award) வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எல்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜனுக்கு ‘தொழில்சார் சிறப்பு விருது’ வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஐ.எம்.ஏ. மருத்துவமனை இந்தியா வாரியத்தின் தலைவர் டாக்டர் ரவிக்குமார், தலைமை விருந்தினராக RI 3201 மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மில்லினம் தலைவர் யுவராஜ், செயலாளர் சுந்தரமூர்த்தி, எல்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் வித்யா ராஜன் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.