அகில இந்திய அளவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இரண்டாம் இடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளை மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஸ்ரீ பவன் பாரதி பள்ளி டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி நடத்தியது. ஐந்து மண்டலங்களிலிருந்து தேர்வு பெற்ற இருபது அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டன.

19 வயதிற்குப்பட்டோருக்கான மாணவர் பிரிவில், சன்ட்கியானி குருஜன் அகாடெமி பள்ளியுடன் இறுதிப் போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் ஆடவர் அணி மோதியது. அதேபோல், 19 வயதிற்குப்பட்டோருக்கான மாணவியர் பிரிவில் ஹரித்துவாரைச் சேர்ந்த ஸ்ரீராம் வித்யா மந்திர் பள்ளியுடன் சச்சிதானந்த ஜோதி நிகேதன் மாணவியர் அணி மோதின. அகில இந்திய அளவில் ஜோதி நிகேதன் பள்ளியின் மாணவர்-மாணவியர் ஆகிய இரு அணிகளும் முதலிடம் பெறும் வாய்ப்பை நழுவ விட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், எல்.என்.சி.டி. குழுமத்தின் தலைவர் ஜெய் நாராயன் சக்க்ஷை, சுசோபன் பானர்ஜி IPS., ஸ்ரீ பவன் பாரதி பள்ளி இயக்குநர் ரீதா ரௌட், முதல்வர் சாரு அரோரா, மற்றும் சி.பி.எஸ்.இ விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் சாகர் ராய்க்வார் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு வெள்ளிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.

பெண்கள் பிரிவில் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மாணவியர் பிரிவில் சிறந்த வீராக சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் எஸ்.ரிதுமிகா மற்றும் மாணவர்கள் சிறந்த கோல் கீப்பராக பி. பிஜு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.