ஓய்வூதியத்தில் கணவருக்கு பதிலாக குழந்தைகள் பெயரை இணைக்கலாம்!

அரசாங்கப் பெண் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெரும் பெண்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு குழந்தைகள் பெயரை நாமினியாக இணைத்துக் கொள்ளலாம் என்று பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

தற்போது, ​​அரசு ஊழியர் இறந்த பிறகு, குடும்ப ஓய்வூதியம் முதலில் அவரின் கணவருக்கு வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்க்கு அவர் தகுதியற்றவராகிவிட்டால் அதாவது, இறந்த பின்னரே குழந்தைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவார்கள். இந்த நடைமுறைகளை மாற்றி அமைக்க ஓய்வூதிய அமைச்சகம் சார்பாக பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும், கருத்துக்களும் கோரப்பட்டது.

இதனையடுத்து, தங்கள் பென்ஷன் பெறுவதற்கு குழந்தைகள் பெயரை நாமினியாக இணைத்துக் கொள்ளலாம் என்று பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. திருமண பந்தத்தில் கணவருடன் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அல்லது கணவருக்கு தனது ஓய்வூதியம் போய் சேர்வதில் விருப்பம் இல்லை என்றாலும் கணவர் பென்ஷன் பெற்றுக் கொள்வதாக இருந்தது. அந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டிருக்கிறது.