கோவை மக்கள் நேசக்கரம் – 2 டன் நிவாரண பொருட்கள் சென்னை புறப்பட்டன

கோவையில் இருந்து சென்னைக்கு 2-வது கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் உணவு,நீர் மற்றும் அத்தியாவசிய பொருளின்றி தவிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதனை மாவட்ட நிர்வாகம் அனுப்பி உள்ளது.

அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பாக நேற்று இரவு 2 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த சூழலில் இன்றும் கோவையில் இருந்து பால்பவுடர்,பிரட் உள்ளிட்ட 2 டன் நிவாரண பொருட்கள் விமானம் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டது. மீண்டும் 3 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. நிவாரண பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் அவசரமாக தேவைப்படும் பால்பவுடர்,பிரட், அரிசி,தண்ணீர் உள்ளிட்ட சுமார் 2 டன் பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் சென்னை நிவாரணப் பணிக்காக கோவையில் இருந்து சென்னைக்கு தன்னார்வ இளைஞர்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். நிவாரண பொருட்களையும் அன்புடன் ஏராளமான மக்கள் வழங்கி வருகின்றனர்.