கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் சர்வதேச கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் இந்தோ – யுகே HBP சம்மிட் என்ற பெயரில் சர்வதேச கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் இக்கருத்தரங்கில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்ளும் 150-க்கும் மேற்பட்ட குடல் நோய் சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதுநிலை பயிற்சி மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லீரல் நோய்களைக் குணப்படுத்துவதற்காக இங்கிலாந்து மற்றும் கே.எம்.சி.ஹெச். ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதென கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

இதில் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் குடல் நோய் நிபுணர் மற்றும் மருத்துவத் துறைத் தலைவர் குரு ஐத்தல்; பிர்மிங்ஹாம் குயின் எலிசபெத் மருத்துவமனையின் ஹெபடாலஜி மருத்துவ ஆலோசகர் மற்றும் ரீடர் மருத்துவர் ஜேம்ஸ் ஃபெர்குசன்; இங்கிலாந்து ஃப்ரீமேன் மருத்துவமனையின் ஹெச்பிபி அறுவை சிகிச்சை பேராசிரியர் ஸ்டீபன் வொயிட் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், கே.எம்.சி.ஹெச்.  மருத்துவமனை செயல் இயக்குநர் மருத்துவர் அருண் பழனிசாமி கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்த சர்வதேச பிரதிநிதிகளுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.