ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தேசிய மருந்தக வாரத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரி சார்பாக, விழிப்புணர்வு பேரணி  நிகழ்ச்சி நடைபெற்றது.

ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் தொடங்கிய பேரணியை குனியமுத்தூர் காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரியின் தலைவர் மருத்துவர் பெரியசாமி, இயக்குநர்கள் டாக்டர் பாலமுருகன், டாக்டர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இலவச இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்பட்டது. முன்னதாக, பேரணியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, மருந்துகளின் பயன்பாடு, உள்ளிட்ட விழப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சுமார் 250-க்கும் மேற்பட்ட பார்மசி கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.