இந்துஸ்தான் கல்லூரியில் சர்வதேச பல்கலைகள் பங்கேற்ற பயோசமிட் 2024

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல், மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம் மேலாண்மை ஆகிய துறைகள் இணைந்து உயிரியல் அறிவியலில் புதிய எல்லைகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கை நடத்தின.

வருடாந்திர அறிவியல் நிகழ்வான பயோசமிட் 2024ல் சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள், தங்கள் ஆராய்ச்சி தரவுகளை மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாய்வழி விளக்கக்காட்சி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சி நடைபெற்றது .

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன் குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, துறைத் தலைவர்கள், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.