ஆண்கள் அடிக்கடி கேட்க விரும்பும் பாராட்டுக்கள் எவை தெரியுமா?

பெண்கள் இயல்பாகவே பாராட்டுகளை விரும்புவார்கள். அதே போல் ஆண்களும் பாராட்டுகளை விரும்புகிறார்கள் என்பது நம்மில் எத்தை பேர் அறிந்திருக்கிறோம்.  மனப்பூர்வமான ஒரு பாராட்டை பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் அதனை விரும்பவும் செய்கிறார்கள்.

பலத்தை அங்கீகரிக்க வேண்டும்

பத்தில் ஆறு ஆண்கள் தங்கள் பலத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பணிபுரியும் இடங்கள், குடும்பம் மற்றும் நண்பர்கள் சார்ந்து செயல்படும் இடங்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களின் சவாலான செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டும்.

முயற்சிகளை பாராட்டுங்கள்

அவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் பாராட்டுக்கள் நம்பமுடியாத அளவிற்கு அர்த்தமுள்ளதாக இருக்கும். சிறிய முயற்சிகளைக்கூட நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நகைச்சுவை உணர்வு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பாராட்ட வேண்டும்

பல ஆண்கள் தங்கள் நகைச்சுவை பேச்சுக்கள் மற்றும் உணர்வுகள் பற்றின பாராட்டுக்களைப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  அதோடு, அவர்களின் நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.