நம்பிக்கையின் திறவுகோல் கே.தாமோதரசாமி நாயுடு -நிறுவனர் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர்

“வெற்றி என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை சாதிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, மற்றவர்களை என்ன செய்யத் தூண்டுகிறீர்கள் என்பதுதான்” என்ற வரிகளுக்கு ஏற்றாற்போல் வாழ்ந்தவர் கே.தாமோதரசாமி நாயுடு. கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் கென்னடி திரையரங்கில் ஒரு கேட்டரிங் யூனிட்டை தொடங்கிய தாமோதரசாமி நாயுடு, 1968-ல் “ஸ்ரீ அன்னபூர்ணா” என்ற பெயரில் சைவ உணவகத்தை திறந்தரர்.

தற்போது அன்னபூர்ணா குழுமம் கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில்  20-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. தாமோதரசாமி நாயுடுவின் முயற்சியால் விருட்சமாக வளர்ந்திருக்கும் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் உணவகம் கோவையின் அடையாளமாகத் திகழ்கிறது என்றால் மிகையல்ல. அன்னாரின் நினைவை இன்று நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறோம்.