தொடர் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி?

உலக கோப்பை கிரிக்கெட் லீக் சுற்றில் இன்னும் 11 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இன்று இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பு கட்டத்தை எட்டி வருகிறது. 48 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் 11 போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த தொடரில், முதல் நான்கு இடத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் இருந்தாலும் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்ற அணியாக இந்தியா இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்திய அணி உள்ளது.

மேலும், புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா, பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு உறுதியாக இந்த அணிக்கு உண்டு. இந்நிலையில், பலம் வாய்ந்த இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 37-வது லீக் சுற்றுக் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கவிருக்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.