உலக நவீன வாசக்டமி விழிப்புணர்வு விழா

ஒவ்வொரு வருடமும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை உலக நவீன வாசக்டமி (NSV) இருவார விழா அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள கோயம்புத்தூர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் அலுவலகத்தில் “வாசக்டமி விழிப்புணர்வு ரதம்” மாவட்ட ஆட்சித் தலைவர் கிரந்தி குமார் அவர்களால் செவ்வாய்க்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

இந்த ரதம் ரயில் நிலையம் பேருந்து நிலையங்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

இதில் குடும்ப நல துணை இயக்குனர் சரவணபிரகாஷ், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அருணா, நகர்நல அலுவலர் தாமோதரன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கிருஷ்ணகுமார், மாவட்ட வரிவாக்க கல்வியாளர் ராணி, புள்ளிவிவர உதவியாளர் பிரபாகர், வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் மற்றும் அனைத்து துறை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.