அனைத்து முன்பதிவு டிக்கெட்களும் கன்பார்மாகும்!

உலகில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடக இந்தியா உள்ளது. இருப்பினும், முக்கிய பண்டிகை காலங்களின் போது ரயில்களில் டிக்கெட் பெறுவதும், முன்பதிவு செய்த டிக்கெட்கள் கன்பார்ம் ஆவதும் கடினமாகவே இருக்கிறது.

குறிப்பிட்டு சொன்னால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு செல்ல எப்போதும் டிக்கெட் கிடைப்பதே இல்லை. வட இந்தியர்களுக்கும் இதே நிலைதான். சமீபத்தில் கூட 40 வயது நபர் பீகார் செல்லும் ரயிலில் ஏற முயன்ற போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் விவாத பொருளானது. அதோடு, ரயில்வே துறை தனியார் மையமானதும் உடன் சேர்ந்து கொண்டது ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 800 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய ரயில்வே வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வருகிற 2027 ஆம் ஆண்டுக்குள் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ரயில்வே துறை வெளியிட்ட தகவல் அறிவிப்போடு நின்றுவிடாமல் நடைமுறைப் படுத்தினால் பயணிகள் சிரமத்துக்குள் ஆகாமல் பயணங்களை மேற்கொள்வார்கள் என்பது நிதர்சனம்.