பி.எஸ்.ஜி-யில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

பி.எஸ்.ஜி மருத்துவமனை தினத்தை முன்னிட்டு, நிறுவனம் சார்பில் மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் மற்றும் உடல்நலன் சார்ந்த மருத்துவ கண்காட்சி பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

நாட்கள்:  நவம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் காலை 8 மணி முதல் மாலை  4 மணி வரை நடைபெறுகிறது.

இடம்: பிஎஸ்ஜி  மருத்துவமனை ‘B Block’ பீளமேடு, கோவை.

மேலும் பரிசோதனைகள், மேல் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் செய்து தரப்படும்.

கண்காட்சியில் பங்கேற்பவர்களில் தினமும் 10 நபருக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த மருத்துவ ஆலோசனை முகாம் மற்றும் கண்காட்சியில் நீங்கள் அனைவரும் பங்கு பெற்றுப் பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.