ஸ்ரீரங்கம் விவகாரம் -தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்

ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்தது மன வருத்தம் அளிப்பதாகவும், வைகுண்ட ஏகாதேசி நேரத்தில் கோவிலில் ரத்தம் சிந்தி இருப்பது வேதனைக்குரிய விசையம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசிய அவர்., ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இன்னும் அதிகமாக கண்காணிப்பு தேவை. உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். காஷ்மீர் முழுவதுமாக நம்மோடு இணைந்து இருக்கும் வகையில் தீர்ப்பு வந்து இருக்கிறது.

திமுகவும் , கூட்டணி கட்சிகளும் தாரை வார்த்ததை இந்த அரசு மீட்டு எடுத்து கொண்டு வருகின்றது. காஷ்மீர் ,கவர்னர், கட்சி தீவு என மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது செய்யாத விஷயங்களை இப்பொழுது திமுக பேசிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் ரத்தம் சிந்தும் அளவிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து இருப்பது, பாதுகாப்பு சீர்கேடுகளை காட்டுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று, கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும், கேரள கவர்னர் மீது தாக்குதல் முயற்சி வன்மையாக கண்டிக்கதக்கது என்றவர்.,

மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு., தாத்தா, அவங்க அப்பன் பதவியை பெற உதயநிதி இருப்பது போல என தெரிவித்த அவர்,கலைஞர் உரிமை தொகை என்பது கலைஞரா கொடுப்கின்றார் எனவும் கேள்வி எழுப்பினார். வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியலும் ,மற்ற இடங்களிலும் வருவார் எனவும் தெரிவித்தார்.

கலைஞரின் பேரனா நீங்க ? அவர் இப்படியா பேசினார் ? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழல் திட்டுவார் எனக்கூறிய அவர், திமுக யாரோட அப்பன் வீட்டு சொத்து எனவும் கேள்வி எழுப்பினார். திமுக தொண்டர்கள் முதலில் இதை உதயநிதியிடம் கேள்வி கேட்க வேண்டும், அதற்கு அவரே வழி செய்கின்றார் எனவும் தெரிவித்தார்.