சோம்பேறித்தனத்தை போக்குவது எப்படி ?

எண்ணத்தை மாற்றி அமைக்க வேண்டும்! மற்றவர்களை நம்பியே சோம்பெறிகள் வாழ்வார்கள் . இதை முதலில் விட்டுவிடுங்கள் . யாராவது தன்னை எழுப்பி விட வேண்டும் . அதுமட்டுமல்லாமல் யாராவது நம் வேலையை அவர்களே செய்துவிட்டால் நல்ல இருக்கும் என்று நினைப்பதும் முதலில் நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

தினமும் நடப்பதே நல்லது! கார், பேருந்து, பைக் என்று ஒரு இடத்திற்கு போவதற்கு பல வழிகள் இருந்தாலும் முடிந்தவரை நடக்க முயற்சியுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் அமையும், நம்மில் இருக்கும் சோம்பேறித்தனம் குறையும்.

தன் ஆர்வத்தை மேற்கொள்ளுதல்! யாராவது நிர்பந்தம் செய்தால் மட்டுமே எந்த வேலையாக இருந்தாலும் சோம்பேறிகள் செய்வார்கள் . தானாகவே செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைவாக இருக்கும். அதை முன்வந்து சுயமாக உங்கள் வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள்

திட்டம் தீட்டி செயல்படுதல் திட்டம் தீட்ட கற்றுக்கொள்ளுங்கள் . மனம் சொல்வதை மட்டும் கேட்காமல் திட்டமிட்டு காரியங்களை செய்ய முயற்சி செய்து பழகுங்கள்.

நம் முயற்சியே நமது வெற்றி உங்கள் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அதுபோல உங்கள் வெற்றிகளுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நம்புங்கள். இதனால் சோம்பேறித்தனம் குறைய வாய்ப்பு உள்ளத்து.

சுய உந்துதல் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சோம்பேறிகள் என்பது சோம்பேறிகள் கிடையாது. அவர்கள் ஒரு நிர்பந்தத்தின் கீழே வேலை செய்ய விரும்புபவர்கள். இன்னொருவர் கண்காணித்தால்தான் வேலை செய்வார்கள். தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள தெரியாதவர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திவ வாழ வேண்டும். நினைத்த வேலையை உறுதியாக செய்து முடித்து விடுவேன், நினைத்ததை செய்ய எனக்கு முழு ஆற்றல் வேண்டும்.

தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகதீர்கள்..எல்லா வேலைகளையும் எதாவது ஒரு தொழில்நுட்ப கருவியின் உதவியால் எளிதாக செய்து முடிக்க நினைப்பதை கைவிட்டு. அதற்கு அடிமையாகமல் இருக்க முயற்சியுங்கள்.

இன்று மட்டுமே நிஜம்.. நாளை என்ற வார்தையை மறந்துவிட்டு . முற்றிலுமாக இன்று மட்டுமே நிஜம் என்பத நினைத்துக்கொண்டு வாழுங்கள்.