என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கியவர்கள் -கமல் நெகிழ்ச்சி

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் எனப் பன்முக திறமையாளர்  கமல்ஹாசன் தனது 69-வது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார்.

அவரின் பிறந்தநாள் பார்ட்டியில், நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகர் அமீர்கான், ஒளிப்பதிவாளர்  ரவி.கே சந்திரன், தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன், நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

தமிழ் திரைத்துறையின் அடையாளமான கமலுக்கு, அவரின் ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், “எத்தனையெத்தனை இதயங்கள், அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்” வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது எக்ஸ் (ட்வீட்டர்) பக்கத்தின் வழியாக நன்றி தெரிவித்து இருக்கிறார் கமல்ஹாசன்.