80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்றும் முயற்சி

பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்களை கொண்டு எலிகளின் வயதைக் குறைக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வயதினை குறைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பன்றிகள் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா மற்றும் நானோ துகள்களை வயதான எலியிடம் செலுத்தி சோதனை செய்துள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், E5 எனும் வயது எதிர்ப்பு சிகிச்சை எலிகள் மீது செய்துபார்த்தபோது, எலியின் மரபணுவில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், 70 சதவீத விழுக்காடு ஆய்வு வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், இதே சோதனையை மனிதர்கள் மீது நடத்தினால் 80 வயது முதியவரை  26 வயது இளைஞராக மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இது போன்று நடக்கும் ஆராய்ச்சிகளைப் பார்க்கும்போது, அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியில் இனி வரும் காலங்களில் இதுவரை மானுடப்பிறவியில் நாம் காணாத பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.