கூகுள் நிறுவனம்: ஜாக்பாட் அறிவித்த சன்மானம்

கூகுள் நிறுவனம் தனது சேவைகளில் பிழையைகண்டறிபவர்களுக்கு  ரூ. 25 லட்சம் சன்மானம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறிய புது திட்டம் ஒன்றை அறிவித்து இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் பிழையை கண்டறியும் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான சன்மானம் வழங்கப்பட உள்ளதக புதிய தகவலை வெளியிட்டது.

சன்மானம் வழங்கும் புது திட்டம் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் வல்னரபிலிட்டி ரிவார்ட் புரோகிராம் (Open Source Software Vulnerability Rewards Program) (OSS VRP) என அழைக்கப்படுகிறது. சன்மான தொகை ஆய்வாளர்கள் கண்டறியும் பிகை 100 டாலர்களில் துவங்கி அதிகபட்சமாக 31 ஆயிரத்து 337 டாலர்கள் வரை வழங்கப்பட இருக்கிறது.

அதிகபட்ச சன்மானம் வித்தியாசமான பிழைகளுக்கும் அதன் தீவிரத்தைப் பொறுத்தும், வழங்கப்படும். அதன் நோக்கம் என பல்வேறு அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.

 

 

 

– கோமதிதேவி. பா