இந்தியாவின் மிகப்பெரிய, விலையுயர்ந்த சொகுசு மால் விரைவில் திறப்பு

இந்தியாவில் மிகப்பெரிய, அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியின் `ஜியோ மால்’ நவம்பர் 1 ஆம் தேதியில் திறக்கப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டமாகப் பலரால் கருதப்படும் “ஜியோ வேர்ல்ட் பிளாசா” மும்பையின் பாந்த்ரா குர்லா பகுதி வளாகத்தில் அமைந்துள்ளது.  இந்த வணிக மாலில் உலகின் பிரபல முன்னணி பிராண்ட், கார்டியர்(Cartier), பல்கேரி(Bulgari), லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton), டியோர் (Dior), குஸ்ஸி (Gucci) , ஐடபிள்யூசி ஷாஃப்ஹவுசென் (IWC Schaffhausen)  மற்றும் லக்கேஜ் தயாரிப்பு நிறுவன பிராண்டான ரிமோவா (Rimowa) போன்றவை தங்கள் சோரூம்களை திறக்க உள்ளன.

மேலும், உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் என்பவருக்குச் சொந்தமான லூயிஸ் உய்ட்டன், முகேஷ் அம்பானியின் மெகா மாலில் தனது சோரூமை திறக்க உள்ளது. கூடுதல் தகவலாக எல்.வி.எம்.ஹெச் நிறுவனம் கடைக்காக மாதம் ரூ.40 லட்சம் வாடகை செலுத்தும் என தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஆடம்பர பிராண்டான டியோர் மாத வாடகையாக ரூ.21 லட்சத்திற்கு மேல் செலுத்தப் போவதாகக் கூறப்படுகிறது. அதோடு, ரூபாய் 1.39 கோடி பாதுகாப்பு வைப்புத் தொகையையும் டியோர் நிறுவனம் செலுத்த உள்ளது என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.

இந்தியாவின் மிக விலையுயர்ந்த மாலாக இருக்கும் ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் விஐபி வரவேற்பு, திருமண வரவேற்பு மற்றும் போர்ட்டர் சேவை போன்ற பல்வேறு சேவைகள் உள்ளடக்கியுள்ளது.