கொழுப்பை குறைக்கும் வெங்காய டீ

இந்தியாவில் பல்வேறு விதமான ருசியான உணவுகள் இருக்கிறது. எனவே பிடித்த உணவை சாப்பிடும் போது மக்கள் தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். எனவே எண்ணெய்யில் பொறித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலில் கேட்ட கொழுப்புகள் அதிகம் ஆகிறது.

ஆனால் அதற்கேற்ப தினமும் உடற்பயிற்சி செய்தால் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போது இருக்கும் இளைஞர்கள் போன்களை பயன்படுத்துவதிலேயே முழு நேரத்தையும் செலவு செய்கிறார்கள்.

எனவே உடற்பயிற்சி செய்யாமல் கெட்ட கொழுப்புகளை குறைக்க வெங்காய தேநீர் உதவும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வெங்காய டீ பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. வெங்காயத்தில் உள்ள பிளவனாய்டுகள் கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன. மேலும் உடல் வெப்பத்தை கணிசமாக அதிகரித்து ரத்த நாளங்களை சுத்தப்படுத்துகிறது.

இதுனால கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கிறது. கொழுப்பு தொடர்பான பல பிரச்சனைகளை தவிர்க்கிறது. இதனால் இதய நோய்களும் ஏற்படுவதை தவிர்க்கிறது.

இதனை தயாரிக்க ரெண்டு கப் தண்ணீரில் பாதி வெங்காயத்தை நறுக்கி போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் சிறிது தேன், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து மிதமான சூட்டில் குடிக்கலாம்.