மாணவர்கள் படிக்கும் காலத்தில் நுண்ணறிவு பெற வேண்டும்

ரத்தினம் மருந்தியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு துவக்க விழா அண்மையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசின் அன்னை தெரேசா  முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மருந்தியல் கல்லூரியின் முதல்வர், பதிவாளர் கோபால் கலந்துகொண்டு பேசுகையில், ” நோய் என்பது மனிதனை உட்கொள்ளும். அதனை குணப்படுத்த நல்ல மருந்தும், மருத்துவரும் தேவை. மருந்து இல்லாமல் இருந்தால் மனிதன் சிறிதளவு கூட செயல்பட முடியாமல் போய்விடும். மருந்தியல் துறை எல்லா காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் மாணவர்கள் படிக்கும் காலத்தில் நுண்ணறிவு பெற வேண்டும்” என்றார்.

ரத்தினம் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் தனது உரையில், கல்லூரியின் கல்வி நிறுவனங்களைப் பற்றியும்  சிறப்புகளை பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், மருந்துகளைக் குறித்தும், அவசர காலத்தில் அதன் முக்கியத்துவத்தைக் குறித்தும் விளக்கினார்.

இவ்விழாவில் மருந்தியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.