கையெழுத்து இயக்கம் நடத்துவது படிப்பிற்கு இடையூறான செயல்

“குடியரசு தலைவர் சென்னை வரக்கூடிய சில மணி நேரங்களில் அவர் தங்க கூடிய இடத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடந்துள்ளது. மேலும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கேள்விக் குறியாக உள்ளது” என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனை ஆழமாக விசாரிக்க வேண்டும். நோக்கத்தை அறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் முதலில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வில் கடின உழைப்பால் உயர்ந்து பிற மாநில மாணவர்களுக்கு சவாலாக தமிழக மாணவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு சதவீதமும் அதற்கேற்றவாறு உயர்ந்து வருகிறது. தேர்வு நெருங்கும் காலத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துவது படிப்பில் இடையூறு ஏற்படுத்தும் செயல். திமுக உண்மையில் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்றால் சட்ட ரீதியாக செல்ல வேண்டும் . அரசியல் ரீதியாக பெற்றோர்களையும் மாணவர்களையும் குழப்புவது சரியல்ல.

கொடுத்த வாக்குகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் எதிர்க்கட்சிகளை முடக்க செயல்படுகிறது. சிறுபான்மையின் மக்கள் விடுதலை செய்யக்கூடிய நிலையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. அவர்களுடைய உண்மையான முகத்தை மக்கள் கவனித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.