வாயில் காயத்தோடு தவித்த காட்டு யானை உயிரிழப்பு

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, தடாகம் அருகில் களப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது காட்டு யானை ஒன்று படுத்து கிடப்பதை செவ்வாய்க்கிழமையன்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வனக்கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் வாயில் காயம் இருப்பது கண்டறியப்பட்டு அவுட்காயால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவரால் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மதியம் சுமார் 02:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி காட்டு யானை மரணமடைந்தது. யானையின் உடலானது மாங்கரை வன ஓய்வு விடுதி வளாக பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டி ஆகியோர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவர்கள் சுகுமார் மற்றும் விஜயராகவன் ஆகியோரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.